இந்தியா

ஹரியானாவின் முன்னாள் முதல்வர் காலமானார்!

Published

on

ஹரியானாவின் முன்னாள் முதல்வர் காலமானார்!

ஹரியானாவின் முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளத்தின் (INLD) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (Om Prakash Chautala) தனது 89 ஆவது வயதில் குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.

ஐந்து முறை ஹரியானா முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜனவரி 1935 இல் ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தில் பிறந்த சௌதாலா, இந்தியாவின் 6 ஆவது துணைப் பிரதமராகப் பணியாற்றிய சவுத்ரி தேவி லாலின் மகனாவார்.

தேவிலால் ஹரியானா முதலமைச்சராகவும் இருந்தார்.

ஓம் பிரகாஷ் சவுதாலாவின் உடல் சிர்சா மாவட்டத்தில் உள்ள தேஜா கெராவில் சனிக்கிழமை (21) பிற்பகல் தகனம் செய்யப்படும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்கு வைக்கப்படும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version