இந்தியா

Weather Update | சென்னைக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு பகுதி – அடுத்த 4 நாட்கள் இந்த நிலைதான்.. வானிலை எச்சரிக்கை!

Published

on

Weather Update | சென்னைக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு பகுதி – அடுத்த 4 நாட்கள் இந்த நிலைதான்.. வானிலை எச்சரிக்கை!

Advertisement

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிவந்த நிலையில், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னைக்கு வடகிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இது மேலும் வடக்கு- வடகிழக்கு திசையை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டிசம்பர் 25-ஆம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதற்கிடையே, கரூர், ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கரூரில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், திருமாநிலையூர், வெங்கமேடு, காந்திகிராமம், தாந்தோன்றிமலை, சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 நிமிடத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல், திருப்பூர் மாநகர் பகுதிகளான ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Advertisement

அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தின் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது.

நாகை, ஈரோடு, சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம், குள்ளம்பாளையம், வெள்ளாளப்பாளையம், மொடச்சூர், கரட்டடிபாளையம் ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல், நாகை மாவட்டத்தில், வேளாங்கண்ணி, செருதூர், திருப்பூண்டி, மேலப்பிடாகை, கீழையூர், வாழக்கரை, திருக்குவளை ஆகிய பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மாலையில் பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர்.

Advertisement

சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. வாணியங்குடி, முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், பையூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version