இந்தியா

இந்தியாவில் முதன் முறையாக நடைபெறும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்

Published

on

இந்தியாவில் முதன் முறையாக நடைபெறும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்

மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலகின் பெரிய விளையாட்டு, பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்.
போட்டி முதன் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.

கடைசியாக ஜப்பானின் கோபேவில் நடந்த போட்டியில் 1000க்கும் அதிகமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதன் 12வது தொடர், முதன் முறையாக இந்திய மண்ணில் வரும் 2025, செப்டம்பர் முதல் அக்டோபர் வரை டில்லி நேரு மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்தியாவின் தேசிய பாராலிம்பிக் கமிட்டி வெளியிட்ட செய்தியில்,’ உலக விளையாட்டின் வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்கிறது. இதன் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது பாரா உலக தடகள சாம்பியன்ஷிப். 

2036ல் ஒலிம்பிக், பாராலிம்பிக் நடத்த திட்டமிட்டுள்ள இந்தியாவின் கோரிக்கைக்கு இப்போட்டி உதவியாக அமையும்,’ என தெரிவித்துள்ளது.

Advertisement

 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் ஆசியாவில் 2015ல் தோஹா, 2019ல் துபாய், 2024ல் கோபேவில் நடந்தன. தற்போது நான்காவது முறையாக இந்தியாவின் டில்லியில் நடக்க உள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version