சினிமா

லைக்கா நிறுவனத்தின் கண்ணிலே விரலை விட்டு ஆட்டும் கமல்.. அடுத்தடுத்த படத்தில் முடங்கிப் போய் நிற்கும் சங்கர்

Published

on

லைக்கா நிறுவனத்தின் கண்ணிலே விரலை விட்டு ஆட்டும் கமல்.. அடுத்தடுத்த படத்தில் முடங்கிப் போய் நிற்கும் சங்கர்

: பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்ததாலோ என்னமோ, சங்கர் இயக்கக்கூடிய ஒவ்வொரு படத்திற்கும் மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த வகையில் ஷங்கர் இயக்கிய எல்லா படங்களிலுமே மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் கமலை வைத்து எடுத்த இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால் பிரபலங்களும் சரி, மக்களும் இது என்ன சங்கர் படமா என்று சொல்லும் அளவிற்கு கழுவிக் கழுவி ஊத்தி விட்டார்கள்.

நல்ல பேரை சம்பாதிப்பது ரொம்பவே கடினம் ஆனால் கெட்ட பெயரை எடுப்பது ரொம்பவே எளிது என்று ஒரு சொலவடை சொல்வது போல் இத்தனை வருஷமாக எடுத்து வைத்த மொத்த பெயரையும் சங்கர் இந்தியன் 2 மூலமாக கெடுத்துக் கொண்டார். இதனால் இந்தியன் 3 படமும், தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கி வரும் கேம் சேஞ்சர் படமும் கேள்விக்குறியாக இருக்கிறது.

Advertisement

அதாவது ராம் சரணை வைத்து கிட்டத்தட்ட 450 கோடியில் படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் சங்கர். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் படம் வியாபாரம் ஆகாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதே நேரத்தில் இந்தியன் 3 படமும் வியாபாரம் ஆகாமல் இருக்கிறது.

இதனால் தியேட்டரில் ரிலீஸ் பண்ணி பெரும் நஷ்டத்தை அடைவதற்கு இந்தியன் 3 படத்தை ஓடிடியிலேயே ரிலீஸ் பண்ணலாம் என்று லைக்கா நிறுவனம் முடிவு பண்ணி இருக்கிறது. ஆனால் ஷங்கர் மற்றும் கமலுக்கு இது மிகப்பெரிய அவமானமாக தெரிகிறது. ஏனென்றால் பல கோடி செலவு பண்ணி எடுத்த ஒரு படத்தை ஈசியாக ஓடிடி இல் ரிலீஸ் செய்து விட்டால் கௌரவ குறைச்சல்.

அத்துடன் அடுத்தடுத்த படத்திற்கும் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்பதால் கமல், லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய செக் வைத்து விட்டார். அதாவது இந்தியன் 3 படப்பிடிப்பு பாதி அளவில் முடிந்த நிலையில் அதற்கு டப்பிங் பேசுவதற்கு கமல் ஒத்துழைப்பு கொடுக்காமல் AI டெக்னாலஜி படிப்பதற்கு வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டார். இதனால் கமல் இல்லாமல் படத்தை முடிக்க முடியாது என்பதால் லைக்கா நிறுவனம் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

Advertisement

நான் யாரு, என்கிட்டயே உங்க ஆட்டத்தை காட்டுறீங்களா என்று சொல்லாமல் கமல், லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் கண்ணிலே விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு செக் வைத்து விட்டார். அதே மாதிரி ஷங்கர் பல வருஷங்களாக இயக்கி வரும் கேம் சேஞ்சர் படமும் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.

இதனால் அடுத்த படத்தை இயக்க முடியாமல் சங்கரும் முடங்கிப் போய் இருக்கிறார். ஒரு படம், மூன்று பேருடைய கேரியரையும் ஆட்டி படைத்து விட்டது என்றே சொல்லலாம். இதிலிருந்து ஷங்கர், கமல் மற்றும் லைக்கா நிறுவனம் எப்படி மீண்டு வருகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version