இந்தியா

Special Train | கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை : தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Published

on

Special Train | கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை : தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சிறப்பு ரயில்

Advertisement

அதன்படி, திருச்சி வழியாக இயக்கப்படும் தாம்பரம் – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 12.35 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அதே நாட்களில் மதியம் 12.15 மணியளவில் கன்னியாகுமரியை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் கன்னியாகுமரியிலிருந்து டிசம்பர் 25 மற்றும் ஜனவரி ஒன்றாம் தேதிகளில் மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு மறு நாட்களில் அதிகாலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோன்று சென்னை சென்ட்ரலிலிருந்து ஈரோடு வழியாக கொச்சுவேலிக்கு டிசம்பர் 23 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. மறுமார்க்கத்தில் டிசம்பர் 24 மற்றும் 31 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version