இந்தியா

TN Weather Update | கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களிலும் மழை இருக்கு… வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கணிப்பு – எங்கெல்லாம் தெரியுமா?

Published

on

TN Weather Update | கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களிலும் மழை இருக்கு… வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கணிப்பு – எங்கெல்லாம் தெரியுமா?

Advertisement

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு புத்தாண்டு அன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மத்திய வங்கடலில் உள்ள நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தை நோக்கி வரக்கூடும்; இது வலுவான சலனமாக இல்லையென்றாலும் கிழக்கத்திய அலையை கொண்டு வரும். இதனால் கடலோர தமிழகத்தில் மழை இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் மழையை எதிர்பார்க்கலாம். வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல் வாரத்திற்கு பிறகு முழுமையாக விலகக்கூடும் எனவும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டத்தை பொறுத்தவரை இனி வரக்கூடிய காலங்களில் சலனம் ஏதும் இருந்தால் மட்டுமே பெரும் மழை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல லாலினோ ஆண்டுகளில் சலனங்கள் அதிகமாக இருக்கும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மூன்று மழை நிகழ்வுகள் கிடைத்துள்ளது. இதன் காரணமாக திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை அதிகமாக பதிவாகியுள்ளது எனவும், காற்று குவிதல் இருந்தால் புத்தாண்டு அன்று மழைக்கு வாய்ப்பு இருக்கும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு புத்தாண்டு அன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version