இந்தியா

TN Weather Update | வங்கக்கடலில் அதே இடத்தில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி… அடுத்தது என்ன? – சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்டேட்

Published

on

TN Weather Update | வங்கக்கடலில் அதே இடத்தில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி… அடுத்தது என்ன? – சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்டேட்

Advertisement

இது தொடர்பாக வானிலை மையம் தென் மண்டல இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை 5.30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து,  இன்று (22-12-2024) காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24 – ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய  வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை  நோக்கி நகரும்.

22-12-2024 மற்றும் 23-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில்  லேசான பனிமூட்டம் காணப்படும்.

Advertisement

24-12-2024: வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

26-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

27-12-2024 மற்றும் 28-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 

Advertisement

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில  பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

Advertisement

   

22-12-2024 முதல்  24-12-2024: வடதமிழக கடலோரப்பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Advertisement

25-12-2024: தமிழக கடலோரப்பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை.

Advertisement

22-12-2024 மற்றும் 23-12-2024:ஆந்திர கடலோரப்பகுதிகள்,  மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24-12-2024 மற்றும் 25-12-2024: : தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்,  மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை.

Advertisement

அரபிக்கடல் பகுதிகள்:  எச்சரிக்கை ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version