இந்தியா

அட்வென்சியர் நிறைந்த குட்லாடம்பட்டி மலை… ஜாலியா ட்ரெக்கிங் போகலாமா ?

Published

on

அட்வென்சியர் நிறைந்த குட்லாடம்பட்டி மலை… ஜாலியா ட்ரெக்கிங் போகலாமா ?

குட்லாடம்பட்டி அருவி

Advertisement

குட்லாடம்பட்டி அருவி… ஒரு காலத்துல தென்காசிக்கு குற்றாலம் என்றால் மதுரைக்கு குட்லாடம்பட்டி அருவின்னு சொல்லுவாங்க…அதாவது, மதுரையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் வாடிப்பட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் இருக்கக்கூடிய அருவியின் பெயர் தான் குட்லாடம்பட்டி அருவி அல்லது தடாகையின் நாச்சி அம்மன் நீர்வீழ்ச்சி.கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலின் காரணமாக இந்த அருவி சேதாரம் அடைந்த காரணத்தினால் கடந்த ஆறு வருடங்களாக பொதுமக்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10.20 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு சார்பாக மீண்டும் இந்த அருவி சீரமைக்கப்பட்டு கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்துச்சு…

இப்படி மதுர மக்களும் இந்த அருவிக்காக காத்திருக்கக்கூடிய அதே சமயத்தில் மதுரை சுற்றுலாத்துறை சார்பில், குட்லாடம்பட்டி மலைக்கு ட்ரெக்கிங் போக முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ரொம்பவே அட்வென்சர் நிறைந்த இந்த குட்லாடம்பட்டி மலைக்கு ட்ரெக்கிங் போக முன்பதிவு எப்படி செய்யலாம் என்றும் இந்த ட்ரெக்கிங் குறித்த முழு விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாமா…

Trek Tamilnadu என்ற இணையதளத்தில், மதுரை மாவட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் குட்லாடம்பட்டி அருவியை தேர்ந்தெடுக்க வேண்டும்.அப்படி தேர்ந்தெடுத்தால் அதில் இரண்டு பேக்கேஜ் வரும். ஒன்று நான்கு கிலோமீட்டர் தூரம் 2 மணி நேரமாக எளிதான முறையில் ட்ரெக்கிங் செய்வதற்கு சிறப்பு கட்டணமாக 799 ரூபாயாகவும், இரண்டாவதாக 8 கிலோமீட்டர் தூரம் 4 மணி நேரமாக மிதமான முறையில் ட்ரெக்கிங் செய்வதற்கு சிறப்பு கட்டணமாக 2129 ரூபாய் என்று இந்த இரண்டு பேக்கேஜ் களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

Advertisement

இந்த இரண்டு விதமான கட்டணத்திற்கான பேக்கேஜ்ல என்னலாம் இன்க்ளூட் ஆகும்னு பாத்தீங்கன்னா…ட்ரக் இன்சூரன்ஸ் , மழை ஏறுவதற்கான இன்ஃபர்மேஷன் கைடு கூடவே வருவாங்க, துணிப்பை, தொப்பி, சிற்றுண்டி இது எல்லாமே இருக்கக்கூடிய இந்த பேக்கேஜ்ல மூலமா ட்ரெக்கிங் போனீங்கன்னா, போற வழியெல்லாம் அட்வென்சர் நிறைந்தும், இந்திய கவுர், காட்டு நாய்கள், மெல்லிய லோரிஸ், லங்கூர் போன்ற வனவிலங்குகளையும் உங்களுக்கு லக் இருந்தா கண்டிப்பா பார்க்க முடியும் என்று சொல்லப்படுகின்றது..

மேலும் விவரங்களுக்கு, என்ற எண்ணிற்கோ அல்லது என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நீங்களும் த்ரில்லானா அட்வென்ச்சர் நிறைந்த ஒரு பகுதிக்கு ட்ரக்கிங் போக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பா இந்த குட்லாடம்பட்டி மலைக்கு ட்ரெக்கிங் போக மிஸ் பண்ணிடாதீங்க…

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version