இலங்கை

இனம் காண முடியாத நோய் தாக்கத்திற்குள்ளான சம்பா நெற்செய்கை!

Published

on

Loading

இனம் காண முடியாத நோய் தாக்கத்திற்குள்ளான சம்பா நெற்செய்கை!

இனம் காண முடியாத நோய் தாக்கத்தின் காரணமாக ஐந்து ஏக்கர் சம்பா நெற்செய்கை முற்று முழுதாக அழிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவை பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை சின்னவரணி பகுதியில் பெரும்போக சம்பா நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரது நெற் செய்கையில் 70 நாட்கள் கடந்த நிலையில் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இனங்கான முடியாத நோய் தாக்கம் காரணமாக ஐந்து ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த சம்பா நெற்செய்கை முற்று முழுதாக அழிந்து நீரில் கரைந்து உள்ளது.

Advertisement

இது தொடர்பாக எமது பகுதி விவசாய அமைப்புகள் மற்றும் கமநல சேவை திணைக்களத்தினர் வருகை தந்து எமது நெற்செய்கைகக்கு ஏற்பட்டுள்ள அழிவுக்கான காரணத்தினை கண்டறிய வேண்டும் எனவும், இந்நிலை தொடருமாயின் இனிவரும் காலங்களில் நெற்செய்கை மேற்கொள்வது மிகவும் கடினமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version