இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசிடம் இருந்தும் வந்த அழைப்பு!

Published

on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசிடம் இருந்தும் வந்த அழைப்பு!

கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின்படி 13 மாதங்கள் சிறையிடப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அரசின் கீழும் பல தடவைகள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வந்தேன்.

சமீபத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைதியாக வாழும் சூழ்நிலை கிடைத்துள்ளது என்று நம்பி இருந்தேன்.

Advertisement

எனினும் இன்றையதினம் (23-12-2024) எதிர்வரும் 28 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகளுக்கு வருமாறு கட்டளை கிடைக்க பெற்றுள்ளது என வேலமாலிகிதன் அருணாசலம் என்பவர் முகநூலில் இந்த பதவியை ஈட்டுள்ளார்.

இது தொடர்பில் வேலமாலிகிதன் அருணாசலம் என்பவருக்கு பொலிஸார் அனுப்பிய கடிதத்தில்,

பயங்கரவாத மற்றும் தடுப்பு சட்டத்தின் படி, கிளிநொச்சியில் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்ளவதற்காக 28-12-2024 ஆம் திகதி அன்று காலை 09.00 மணியளவில் பூநகர் வீதி, குமரபுரம், பரந்தன் முகவரில் இருக்கும் பயங்கரவாத மற்றும் தடுப்பு பிரிவின் பொறுப்பு அதிகாரியை வேலமாலிகிதன் அருணாசலம் என்பவர் சந்திக்க வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version