இந்தியா
பேருந்து ஓட்டும்போது செல்போன்.. அரசு ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை பகீர் எச்சரிக்கை!
பேருந்து ஓட்டும்போது செல்போன்.. அரசு ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை பகீர் எச்சரிக்கை!
அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் பணியின் போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருத்தல் கூடாது என்றும் அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிந்த பிறகு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதனை மீறி செல்போன் பயன்படுத்தியபடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அனைத்து போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.