இந்தியா
“மார்கழி மாத வழிபாடு” – இந்த டைம்ல ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை வணங்கினால் மட்டும் போதும்…
“மார்கழி மாத வழிபாடு” – இந்த டைம்ல ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை வணங்கினால் மட்டும் போதும்…
மார்கழி மாத வழிபாடு
மாதத்திலேயே சிறந்த மாதம் மார்கழி என்று சொல்லப்படுகிறது. சூரிய பகவான் வியாழபகவான் வீட்டில் அவதரிக்கும் மாதம் மார்கழி மாதம் ஆகும். இந்த மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம் என்று தெரிவிக்கின்றனர். இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவனை வழிபட்டால் ஒரு வருடம் இறை வழிபாடு செய்ததற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. இத்தனை சிறப்பு நிறைந்த மார்கழி மாதத்தில் இறைவனை எப்படியெல்லாம் வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று புதுக்கோட்டை மாவட்ட கோவில் அர்ச்சகர் கணேசன் தெரிவித்துள்ளார்.
தனூர் மாதம் என்று சொல்லக்கூடியது தான் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தினந்தோறும் பிரம்ம முகூர்த்தத்தில் கோவில்கள் மற்றும் வீடுகளில் பூஜைகள் செய்வது சிறப்புகளை தரும். பெருமாள் கோவில்களில் திருப்பாவை திருவெம்பாவை போன்ற பாசுரங்கள் என்று சொல்லக்கூடிய பாடல்கள் எல்லாம் பாடப்பெற்று அபிஷேகங்கள் செய்யப்படும்.
மார்கழி மாதம் என்பது பொதுவாகவே விசேஷம் நிறைந்த மாதமாக பார்க்கப்படுகிறது. அனைத்து வளமும், நலமும் கிடைக்கச் செய்யும் மாதம் தான் இந்த மார்கழி மாதம். மார்கழி மாதத்தில், பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய நான்கு மணி முதல் ஆறு மணிக்குள் எழுந்து வாசலில் சாணம் தெளித்து, கோலமிட்டு திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய பாசுரங்கள் பாடி இறைவனை வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பெருமாளையும், அம்பாளையும் வழிபாடு செய்வதால் திருமண யோகம் மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் மற்றும் குடும்பம் செழித்து வாழ்வில் நன்மை பெருகும் என்று அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.