இலங்கை

யானைகள் கொல்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Published

on

யானைகள் கொல்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஏற்கனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், காட்டு யானைகளை பாதுகாக்க மக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதால் வேலிகள் அல்லது கம்பிகளுக்கு அனுமதியின்றி மின்சாரம் வழங்குவது குறித்து அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்படி, 0112 118 767 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது 1987 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version