பொழுதுபோக்கு
ரீல் டு ரியல் சம்பவம்; ‘புஷ்பா 2’ பார்க்க வந்த போது போலீசாரிடம் சிக்கிய நிஜ கடத்தல்காரர்
ரீல் டு ரியல் சம்பவம்; ‘புஷ்பா 2’ பார்க்க வந்த போது போலீசாரிடம் சிக்கிய நிஜ கடத்தல்காரர்
நாக்பூரில் ‘புஷ்பா 2’ படத்தை காண வந்த போது போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த விஷால் மேஷ்ராம் என்ற நபரை திரையரங்கிற்குள் வைத்து போலீசார் கைது செய்தனர். விஷால் மீது 2 கொலை உள்பட 27 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இவர் படம் பார்க்க தியேட்டருக்கு வருவதை தெரிந்து கொண்ட போலீசார் அவரின் காரை பஞ்சர் செய்து வியாழக்கிழமை படத்தின் க்ளைமாக்ஸின் போது தியேட்டருக்குள் வைத்து கைது செய்தனர். நள்ளிரவில் தியேட்டருக்குள் வைத்து நடந்த இந்த கைது நடவடிக்கையை கண்டு அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். விஷால் தற்போது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விரைவில் நாசிக்கில் உள்ள சிறைக்கு மாற்றப்படுவார் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.