உலகம்

வெள்ளை மாளிகையின் முக்கிய பதவியில் தமிழர்; டிரம்பின் அடுத்த அதிரடி

Published

on

வெள்ளை மாளிகையின் முக்கிய பதவியில் தமிழர்; டிரம்பின் அடுத்த அதிரடி


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 23/12/2024 | Edited on 23/12/2024

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில், உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு டொனால்ட் டிரம்ப் தனது அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். அத்துடன் விவேக் ராமசாமி உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களையும் முக்கிய பதவிகளில் நியமனம் செய்திருக்கிறார். இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் முக்கிய பதவியில் நியமித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ) தொழில்நுட்பத்தில் வல்லுநராக இருக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டர், பேஸ்புக், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில்தான் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். மேலும், தொழில்நுட்பத்திற்கான அதிபரின் ஆலோசனைக் குழுவிலும் ஸ்ரீராம் கிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • டிடிவி தினகரன் பிறந்தநாள்; நலத்திட்ட உதவி வழங்கும் விழா (படங்கள்)

  • ‘அதிக ஊழல் அமைச்சர்கள்’ – ஆம் ஆத்மிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வெளியிட்ட பா.ஜ.க!

  • வெள்ளை மாளிகையின் முக்கிய பதவியில் தமிழர்; டிரம்பின் அடுத்த அதிரடி

  • ‘சாதியை சொல்லி தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் மகன்’-கண்ணீர் விட்டு புகாரளித்த மாற்றுத்திறனாளி

  • உள்ளாட்சிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை பறிப்பது என்ன வகை ஜனநாயகம்? – அன்புமணி

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version