இந்தியா

43 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. இரண்டு நாள் பயணமாக குவைத் புறப்பட்டார் பிரதமர் மோடி!

Published

on

43 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. இரண்டு நாள் பயணமாக குவைத் புறப்பட்டார் பிரதமர் மோடி!

Advertisement

குவைத் மன்னர் Sheikh Meshal Al-Ahmad அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு சென்று உள்ளார். விமான நிலையத்தில் சென்றடைந்த பிரதமர் மோடி அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது இந்தியா – குவைத் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் குவைத் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் Sheikh Sabah Al-Khalid, மற்ற தலைவர்கள், தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும், குவைத்தில் வசிக்கும் இந்திய மக்கள் மற்றும் தொழிலாளர்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுகிறார். இதையடுத்து நடப்பாண்டுக்கான அரேபியன் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கடந்த 43 ஆண்டுகளில் குவைத் செல்லும் முதல் இந்திய பிரதமர், மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கடைசியாக கடந்த 1981ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே குவைத் தலைநகர் குவைத் சிட்டிக்கு வந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடி மோடி என கோஷம் எழுப்பிய இந்தியா வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு கொடுத்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version