இந்தியா
Christmas 2024| களைக்கட்ட தொடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை… கண்களை கவரும் அலங்கார பொருட்கள் ரெடி…
Christmas 2024| களைக்கட்ட தொடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை… கண்களை கவரும் அலங்கார பொருட்கள் ரெடி…
கண்களை கவரும் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள்..
உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. கிறிஸ்தவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராகி வருகின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக விதவிதமான ஸ்னோ மேன், ஸ்டார்கள், குடில்கள், அலங்கார விளக்குகள், சான்டா கிளாஸ் பொம்மைகள் விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ளன. இதனை புதுக்கோட்டையை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது இயேசு கிறிஸ்து பிறந்த நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை உலகிற்கு வரவேற்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராகி விடுவார்கள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் விதமாக ஸ்டார் வைப்பது, வீட்டில் குடில் அமைப்பது, வீட்டை விளக்குகளால் அலங்கரிப்பது என கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராகி விடுவர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்துவ வீடுகளில் ஸ்டார்கள் வைத்து குடில் அமைத்து கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அதாவது புதுக்கோட்டை கடைவீதிகள், பிருந்தாவனம், கீழ ராஜ வீதி, சாந்தரம்மன் கோவில் தெரு போன்ற கடைவீதிகளில் கிறிஸ்துமஸ் பொருட்களான ஸ்டார்கள், குடில்கள், அலங்கார விளக்குகள், சான்டா கிளாஸ், பரிசுகள், மெழுகுவர்த்தி, வாழ்த்து அட்டைகள், பனி பொம்மைகள், போன்றவைகள் விற்பனை களை கட்டி வருகிறது. பொதுமக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.