இந்தியா

TN Rain Update: ஒரு வாரமாக வெளுத்து கட்டிய‌ வெயில்… சூட்டை தணித்த குட்டி மழை…

Published

on

TN Rain Update: ஒரு வாரமாக வெளுத்து கட்டிய‌ வெயில்… சூட்டை தணித்த குட்டி மழை…

ராமேஸ்வரத்தில் மிதமான மழை

Advertisement

வங்கக்கடலில் நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் ராமேஸ்வரம் நகர் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு பின் ஒரு மணி நேரத்திற்கு மேல் மிதமான மழை பெய்து குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.

வங்கக்கடலில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது. இதனால் டிசம்பர் 25-ம் தேதி தமிழகத்தில் கடற்கரை பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் கடந்த ஒரு வாரமாக மழை சிறிதளவு கூட இல்லாமல் பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் இருந்த வந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் இன்று காலை முதல் மேகமூட்டமாக காட்சி அளித்து நண்பகல் நேரத்தில் மிதமான மழை பெய்தது.

ராமேஸ்வரம் நகர் பகுதிகளான புதுரோடு, நடராஜர்புரம், ஜடாயு தீர்த்தம், ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்தது. ஒரு வாரமாக வெயில் கடுமையாக இருந்ததில் தற்போது, குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. டிசம்பர் 26-ம் தேதி வரை இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version