உலகம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மருத்துவமனையில் சேர்ப்பு!

Published

on

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மருத்துவமனையில் சேர்ப்பு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருக்கு வழங்கப்படும் சிறந்த கவனிப்பு குறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என பதிவிட்டுள்ளார். பில் கிளிண்டன் நேற்று மாலை வொஷிங்டனில் உள்ள ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பில் கிளிண்டன் 42ஆவது ஜனாதிபதியாக 1993 முதல் 2001 வரை வெள்ளை மாளிகையில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸா)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version