இந்தியா

கோவாவில் மாட்டிறைச்சி தட்டுப்பாடு; பசு பாதுகாவலர்களுடன் மோதலுக்குபிறகு கடைகளை மூடிய வியாபாரிகள்

Published

on

கோவாவில் மாட்டிறைச்சி தட்டுப்பாடு; பசு பாதுகாவலர்களுடன் மோதலுக்குபிறகு கடைகளை மூடிய வியாபாரிகள்

தெற்கு கோவாவின் மார்கோவில் பசு பாதுகாப்புக் குழுவுடன் தொடர்புடைய உறுப்பினர்களுடன் சமீபத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மாட்டிறைச்சி வியாபாரிகள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கோவா மாட்டிறைச்சி தட்டுப்பாடு எதிர்கொள்கிறது. “பாதுகாப்புக் கவலைகள்” காரணமாக செவ்வாய்க்கிழமை மாட்டிறைச்சி விநியோகம் மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.ஆங்கிலத்தில் படிக்க: Beef shortage looms in Goa as traders down shutters after clash with cow vigilantesமார்கோவில் உள்ள தெற்கு கோவா திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (SGPDA) சந்தை வளாகத்தில் உள்ள மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் திங்கள்கிழமை தங்கள் கடைகளை மூடி, “பசு பாதுகாப்பு குழுக்களை கட்டுப்படுத்த வேண்டும்” மற்றும் கோவா இறைச்சி வளாகத்தில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு மாட்டிறைச்சி கொண்டு செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.அனைத்து கோவா மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவரான மன்னா பெபாரி ஊடகங்களிடம் கூறுகையில், “அறுவைக் கூடத்தில் இறைச்சிக்காக விலங்குகள் கொண்டு செல்லப்படும் போது இந்த பசு பாதுகாப்பு குழுவினர் விற்பனையாளர்களை துன்புறுத்துவது துரதிர்ஷ்டவசமானது. சமீபத்திய சம்பவத்தால் பெலகாவியைச் சேர்ந்த சில வாகன ஓட்டிகள் மாட்டிறைச்சியை இங்கு கொண்டு வரத் தயங்குகின்றனர்.” என்று கூறினார்.கடந்த புதன் கிழமை தெற்கு கோவா திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (SGPDA) சந்தையில் மாட்டிறைச்சி விற்பனையாளர்களின் மாட்டிறைச்சியை இறக்கும் வாகனத்தை இடைமறித்த, பசு பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் இறைச்சி விற்பனை மற்றும் விநியோகம் சட்டவிரோதம் எனக் கூறி, மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது, இதில் மூன்று விற்பனையாளர்கள் மற்றும் பசு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த இருவர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஃபடோர்டா காவல் நிலையத்தில் இரு தரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், “சட்டத்தை கையில் எடுப்பவர்கள்” மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.“கோவா மக்கள் நல்ல மற்றும் சுகாதாரமான மாட்டிறைச்சியைப் பெற வேண்டும் என்று அரசாங்கம் நம்புகிறது. இதனால்தான் இறைச்சி வியாபாரிகள் தங்கள் மாட்டிறைச்சித் தேவைகளை கோவா இறைச்சி வளாகத்தில் இருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். நுகர்வோர் சுகாதாரமான இறைச்சியைப் பெறுவதற்காக இது செய்யப்படுகிறது. ஆனால், யாரேனும் குறுக்கீடு செய்தால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. கோவா மக்களுக்கு சுகாதாரமான மாட்டிறைச்சி வழங்குவதே எங்கள் முன்னுரிமையாக உள்ளது” என்று பிரமோத் சாவந்த் திங்கள்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version