இந்தியா

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம்!

Published

on

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம்!

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

அதனை தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, சாமிநாதன், சென்னை மேயர் பிரியா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.க்கள், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version