இலங்கை

நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயை தள்ளி விட்ட மகன்; நேர்ந்த துயரம்

Published

on

நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயை தள்ளி விட்ட மகன்; நேர்ந்த துயரம்

 வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மகன், தாயை தள்ளிவிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய், திங்கட்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம வல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த தீபா மாலா குமாரி விஜேசிங்க (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பில் அந்த தாயின் மகன் (24) சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு கடந்த (20) ஆம் திகதி கொடுக்கப்பட்ட உணவு கெட்டுப்போனது தொடர்பில் தாய்க்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து தாயை மகன் தள்ளிவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தள்ளியதால் கீழே விழுந்த காரணமாக ஏற்பட்ட காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version