பொழுதுபோக்கு

புஷ்பா 2 விவகாரம்: ஹைதராபாத் காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர்

Published

on

புஷ்பா 2 விவகாரம்: ஹைதராபாத் காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: As police try to piece together Pushpa 2 stampede timeline, Allu Arjun appears before cops தெலங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் இன்று (டிச 24) ஆஜரானார்.முன்னதாக, காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அல்லு அர்ஜுனுக்கு நேற்று (டிச 23) சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என அல்லு அர்ஜுன் தெரிவித்ததாக போலீசார் கூறியிருந்தனர்.டிசம்பர் 4-ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் டிசம்பர் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்த பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அவரது ஒன்பது வயது மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version