இந்தியா
பெரியார் நினைவு தினம் : முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
பெரியார் நினைவு தினம் : முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
தந்தை பெரியாரின் 51-ஆவது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலும், சேகர்பாபு, சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், “‘எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்’ என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று!
‘மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு’ என்பதை மானுடத்துக்கு உணர்த்த தனது இறுதி மூச்சு வரை தளராமல் உழைத்த தந்தை பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்ட நாள்!
சமூகநீதி, மதசார்பின்மை காக்க – மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம். பெரியாரின் நினைவைப் போற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.