இலங்கை

மட்டக்களப்பு மருத்துவமனையின் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Published

on

மட்டக்களப்பு மருத்துவமனையின் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா  மருத்துவமனைக்கு நேற்றையதினம்  சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு கூட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.

Advertisement

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை  தொடர்பில் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், போதனா மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் நிர்வாக சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் அவற்றினை நிவர்த்திசெய்வதற்கும் முடியாத பிரச்சினைகளை சுகாதார அமைச்சு மட்டத்தில் கொண்டு சென்று கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் முரளீஸ்வரன், மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் திருமதி மைதிலி மற்றும் போதனா மருத்துவமனையின் முக்கிய மருத்துவ அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் முக்கிய மருத்துவ அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version