இந்தியா

மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் பலி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் எடுத்த அதிரடி!

Published

on

மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் பலி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் எடுத்த அதிரடி!

சமீபத்தில் திருச்சியில், மின்சாரம் தாக்கி இரண்டு தொழிலாளர்கள்பலியான சம்பவத்தைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி, ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் இரண்டு வார காலத்தில் பதில் அளிக்குமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த கல்லுப்பட்டியைச் சேர்ந்த கலாமணி (45), அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்த மாணிக்கம் (32).

Advertisement

இவரகள் இருவரும் கடந்த 18-ந்தேதி பெட்ரோல் பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள். அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது.

இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இரண்டு பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

Advertisement

இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார். மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் இருவர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு விசாரணை நடத்தியது.

Advertisement

இதைத் தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் இரண்டு வார காலத்தில் பதில் அளிக்குமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version