இலங்கை

யாழில் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைப்பு!

Published

on

யாழில் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைப்பு!

  யாழ்ப்பணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால்
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று (24) காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்றுள்ளார்.

இதன்போது தையலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் வற்புறுத்தியுள்ளார்.

Advertisement

தொடர்ந்து கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பெண்ணை விசாரிக்க முற்பட்ட போது தன்னிடம் கார் உள்ளதாகவும் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்னுடன் பாலியல் இச்சைக்கு வருகிறாயா ? என கேட்டு மதுபோதையில் கலகம் செய்ததாக அப்பெண் கூறினார்.

Advertisement

இதேவேளை பெண்ணின் உறவினர் தன்னிடம் காணொளியும் உள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து மதுபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடாத்தினார்.

உடனடியாக பொலிசார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

அதனை அடுத்து குறித்த விடயம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் த.கனகராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version