இலங்கை

யாழில் பெரும் சோகம்… தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பஸ்தர்!

Published

on

Loading

யாழில் பெரும் சோகம்… தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பஸ்தர்!

யாழ்ப்பாண பகுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் நடாத்திவந்த புகைப்பட நிறுவனம் நஷ்டமடைந்தமையால் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் கோண்டாவில் வடக்கு உள்ள பகுதியைச் சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புகைப்பட நிறுவன உரிமையாளர் நேற்றையதினம் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு இரவு 10.30 மணிக்கு வீடு வந்தவுடன் வீட்டின் மேல் மாடிக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து அவரது மனைவி இரவு 11 மணியளவில் உணவு கொண்டு மேல் மாடிக்கு சென்றபோது அவர் தவறான முடிவெடுத்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

Advertisement

பின்னர் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version