இந்தியா

ஷேக் ஹசீனாவை உடனடியாக பங்களாதேஷூக்கு மீள திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கை!

Published

on

ஷேக் ஹசீனாவை உடனடியாக பங்களாதேஷூக்கு மீள திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை உடனடியாக பங்களாதேஷூக்கு மீள திருப்பி அனுப்புமாறு புதிய இடைக்கால நிர்வாகம் இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

ஷேக் ஹசீனாவிற்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், நீதிதுறை நடவடிக்கைகளுக்காக அவரை திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை வேறொரு நாட்டில் விசாரணைக்காக நாடு கடத்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி முன்னாள் பிரதமரை மீண்டும் பங்களாதேஷுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பங்களாதேஷ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

77 வயதான ஷேக் ஹசீனா கடந்த ஓகஸ்ட் ஐந்தாம் திகதி தனது பதவியிலிருந்து விலகியதுடன், பொதுமக்களின் எதிர்ப்பால் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
அதன் பிறகு, டாக்டர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகத்தின் கீழ் பங்களாதேஷ் நிர்வாகம் மாற்றப்பட்டது.

Advertisement

அண்மையில் இந்திய வெளிவிவகார செயலாளரின் பங்களாதேஷிற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் போது முன்னாள் பிரதமரை மீண்டும் பங்களாதேஷிற்கு அனுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version