இந்தியா

கிச்சன் கீர்த்தனா: பிஸ்தா பாயசம்

Published

on

கிச்சன் கீர்த்தனா: பிஸ்தா பாயசம்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக என்ன செய்து அசத்தலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த பிஸ்தா பாயசம் ரெசிப்பி உதவும். அனைவருக்கும் ஏற்ற இந்த பாயசம், வீட்டிலேயே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.

பிஸ்தா (உப்பில்லாதது) – 100 கிராம்
துருவிய பிஸ்தா – ஒரு டீஸ்பூன்
ரவை – 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – 10 டேபிள்ஸ்பூன்
பால் – அரை லிட்டர்
கன்டென்ஸ்ட் மில்க் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பிஸ்தா எசன்ஸ் – அரை டீஸ்பூன்
பச்சை ஃபுட் கலர் – 1 சிட்டிகை (விரும்பினால்)
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

Advertisement

50 கிராம் பிஸ்தாவுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். மீதமுள்ள பிஸ்தாவை சிறுதுண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து நெய் சேர்த்து, நறுக்கிய பிஸ்தாவைச் சேர்த்து வதக்கவும் (லேசாக வறுத்தால் போதும்). இதில் ரவையைச் சேர்த்து 30 நொடிகள் வதக்கவும். பின்னர் பால், அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்து, ரவை நன்றாக வேகும் வரை மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் கன்டெண்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பாயசம் கெட்டியானதும் எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து இறக்கவும். நறுக்கிய பிஸ்தா தூவிப் பரிமாறவும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version