இந்தியா

குஜராத் கல்லூரி வாசலில் அம்பேத்கர் சிலை சேதம்! மக்கள் போராட்டம்!

Published

on

குஜராத் கல்லூரி வாசலில் அம்பேத்கர் சிலை சேதம்! மக்கள் போராட்டம்!

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரின் கோக்ரா பகுதியில் இயங்கிவரும்  ஸ்ரீ கே.கே. சாஸ்திரி கல்லூரிக்கு முன்னால் உள்ள  அம்பேத்கரின் சிலை  நேற்றைய தினம் மர்ம நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் பர்பானி நகரில் அம்பேத்கரின் சிலைக்கு முன் அரசியலமைப்பின் முன்னுரையை எரித்த மர்ம நபரால் அங்கு கலவரம் நடந்து வரும் நிலையில் குஜராத்திலும் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளமை  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version