சினிமா

சூர்யாவை வைத்து படம் எடுத்தபின், என்னை யாரும் கூப்பிடவே இல்லை.. உடைந்து போன வெங்கட் பிரபு

Published

on

சூர்யாவை வைத்து படம் எடுத்தபின், என்னை யாரும் கூப்பிடவே இல்லை.. உடைந்து போன வெங்கட் பிரபு

கோட் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு மோஸ்ட் வான்டட் இயக்குனராக மாறிவிட்டார். ஆனால் ஆரம்பத்தில் அவர் இந்த அந்தஸ்தை பெற மிகவும் போராடியுள்ளார். விஜய்-க்கு தரமான கோட் படத்தை கொடுப்பதற்கு முன்பு, சிம்புவை வைத்து மாநாடு படத்தை எடுத்தார். அந்த படம் சிம்புவுக்கும் பெரிய கம் பேக் ஆக அமைந்தது.

ஆனால் அந்த படத்துக்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிரபு பரிதாபத்துக்குரிய இயக்குனராக இருந்தார். சூர்யாவை வைத்து மாஸ் என்ற படத்தை எடுத்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. அந்த படத்தை ஒரு காமெடி படமாக எடுக்க தான் திட்டமிட்டிருந்தார்.

Advertisement

ஆனால் சூர்யா தனக்கு மாஸ் commercial elements வேண்டும் என்று கேட்க, அதன்படி ஒரு சில காட்சிகள் அமைக்கப்பட்டது. அதுவே அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக மாறியது.

சூர்யா ஒரு பெரிய ஹீரோ. ஒரு பெரிய ஹீரோவின் படம் தோல்வியானதால், அதற்க்கு பின் வெங்கட் பிரபுவுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. எந்த தயாரிப்பு நிறுவனம் சென்றாலும், நிராகரிப்பை மட்டுமே பரிசாக பெற்றார் வெங்கட் பிரபு. அந்த காலகட்டத்தில், மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியும் இருந்தார்.

இப்படி இருக்க, தன் பாணியில், சில படங்களை எடுக்க ஆரம்பித்தார். அப்படி சிம்புவை வைத்து மாநாடு படம் எடுத்து ஹார்டரிக் வெற்றி கொடுத்தார். அதன் பின் பழையபடி அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

Advertisement

அப்போதுதான் கோட் படத்தின் கதையை யோசித்து முதலில் சூப்பர்ஸ்டாரிடம் சொல்லி, அவருக்கு பிடிக்காமல் போக தளபதி விஜயிடம் கூறியுள்ளார்.

விஜயும் ஒரு வருடம் காக்க வைத்து அதன்பின் நடித்து கொடுத்துள்ளார். இப்படி வெங்கட் பிரபு கடந்து வந்த பாதை அப்படி எளிமையான பாதையாக இல்லை.

தற்போது அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணி கொடுக்க தயார் நிலையில் உள்ளார். ஹீரோ தேர்வு விரைவில் நடக்குமாம்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version