இலங்கை
அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் – ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை
அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் – ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை
கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக பதிக்கப்பட்ட மின் கம்பிகள் மர்ம நபர்களினால் திருடப்படுவதை தடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை (ளுவுகு)ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக பதிக்கப்பட்ட மின் கம்பிகள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில்இ
இந்தத விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் பணிபுரை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மின்சார கம்பிகளை துண்டிப்பதைத் தடுக்க இரவு வேளையில் நெடுஞ்சாலைகளில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள் எனவும் போதைக்கு அடிமையானவர்களே குறித்த செயலில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.