இலங்கை

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது!

Published

on

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ்-கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது.

Advertisement

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

 இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி வழங்கியது? எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள், தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் என அர்ச்சுனா வேண்டுகோள் விடுத்தார்.

 இதற்கு பதில் அளித்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான சந்திரசேகர்,

Advertisement

இனிமேல் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version