சினிமா
கங்குவா அம்மணிக்கு என்ன ஆச்சு? தள்ளாடி செல்லும் நடிகை திஷா பதானி!
கங்குவா அம்மணிக்கு என்ன ஆச்சு? தள்ளாடி செல்லும் நடிகை திஷா பதானி!
கங்குவா திரைப்படத்தின் நடிகை திஷா பதானி தள்ளாடியபடி கார் கதவை இறந்து காரில் ஏறும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்தி படத்தில் மட்டுமே நடித்து வந்த திஷா பதானி, ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என கடுமையாக விமர்சனத்தை சந்தித்தது.கங்குவா படத்தை பார்த்து ஏற்கனவே அவர் மீது கடுப்பில் இருக்கிறார்கள் ஃபேன்ஸ். இந்நிலையில் பாதணி போதையில் தள்ளாடியபடி வந்து தனது கார் கதவை திறந்து உள்ளே அமரும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மணிக்கு என்ன ஆச்சு? ஒருவேல அதுவா இருக்குமோ? என்றும் கருத்துக்களை பகிர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.