இலங்கை

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் அருச்சுனா எம்பியால் அல்லோலகல்லோலம்!

Published

on

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் அருச்சுனா எம்பியால் அல்லோலகல்லோலம்!

   கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டதால் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் அர்ச்சுனாவை பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல் நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள் என்று கூறினார்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த அருச்சுனா எம்.பி இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவரை வாயை மூடுமாறு ஆங்கிலத்தில் கூறினார்.

இதன்போது குறிக்கிட்ட தம்பிராசா, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் தகாத வார்த்தைகளை பாவிக்க கூடாது என்றும், இங்கே அதிகாரிகள் தான் உள்ளார்கள் என கூறியபோது,

குறுக்கிட்ட அர்ச்சுனா,

Advertisement

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கதைக்கும் போது, கதைப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்களா என காட்டமாக கூறியுள்ளார்.

அத்துடன் சகாதேவனை பார்த்து “உங்களுடன் திருப்பி கதைத்ததற்காக ஒரு நாளில் 8 அல்லது 10 பேரை இடமாற்றம் செய்துள்ளீர்கள். இதனை உங்களது கட்சியோடு வைத்துக் கொள்ளுங்கள் என்றார் .

இதன்போது குறுக்கிட்ட தம்பிராசா, ஒரு அரச அதிகாரியை பொது வெளியில் வைத்து அவமானப்படுத்த கூடாது.

Advertisement

இடமாற்றம் பெற்றவர்கள் வேண்டும் என்றால் அமைச்சுக்கு முறையிடலாம் என்றார்.

அதற்கு பதிலளித்த அர்ச்சுனா எம்.பி “நீங்கள் எந்த கட்சி? உங்களுக்கு கிடைக்கவில்லை தானே nomination ஆகையால் அடுத்த முறை முயற்சியுங்கள்.

தயவு செய்து தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள்  என கூறியதுடன், அவரது முகநூல் பதிவு தொடர்பிலும் கேள்வி எழுப்ப இருவருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள்  இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version