இந்தியா

டாப் 10 நியூஸ்: திமுக ஐடி விங் ஆலோசனை முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!

Published

on

டாப் 10 நியூஸ்: திமுக ஐடி விங் ஆலோசனை முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று (டிசம்பர் 26) சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாதவரத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக ஐடி விங் மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Advertisement

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று அண்ணா பல்கலைக்கழகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன்‌ கோவிலில் மகரவிளக்கு மண்டல பூஜை இன்றுடன் நிறைவடைகிறது.

தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென்சூரியனில் இன்று தொடங்குகிறது.

Advertisement

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் ஜாமீன் கோரி தாக்கல் செய்த‌ மனு சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்காணோர் உயிரிழந்தனர். 20 ஆண்டுகள் கடந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version