இந்தியா

பாலியல் வன்கொடுமை… அண்ணா பல்கலை முன்பு அதிமுக சாலை மறியல்!

Published

on

பாலியல் வன்கொடுமை… அண்ணா பல்கலை முன்பு அதிமுக சாலை மறியல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 26) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாமக, பாஜக, அமமுக, நாதக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தவறுவதாக குற்றம்சாட்டி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பாக சாலையில் அமர்ந்து இன்று அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement

ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால், போலீசார் அனைவரையும் கைது செய்தனர். அதிமுகவினர் போராட்டத்தால், கிண்டி பல்கலைக்கழகம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version