இலங்கை

போக்குவரத்து சட்டத்தை மீறிய 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Published

on

போக்குவரத்து சட்டத்தை மீறிய 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 நபர்கள் உட்பட போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மொத்தம் 8,747 வாகன சாரதிகளுக்கு எதிராக இன்று புதன்கிழமை அதிகாலை 6 மணி வரையா 24 மணித்தியாலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கு இணங்க வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை பண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

நாட்டின் போக்குவரத்துச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், வீதி விபத்துகளையும் தவிர்க்கவும், சாரதிகளை வீதி ஒழுங்கை பின்பற்ற செய்யவும் இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதுடன், நேற்று அதிகாலை வரையான 24 மணித்தியாலங்களில் நாட்டில் எவ்வித உயிரிழப்புகளும் வீதி விபத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.

பாதுகாப்பாக வாகனத்தை செலுத்தல், மது அருந்துவதை தவிர்த்தல் மற்றும் போக்குவரத்து சட்டங்களை கடைபிடித்து உயிர்களை பாதுகாக்குமாறும் பொலிஸார் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version