இலங்கை

மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

Published

on

மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

  கொஸ்கொடை, பெலகஸ்பலாத்த பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொஸ்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

Advertisement

உயிரிழந்த இளைஞன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயலை வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக வயலை சுற்றி சட்டவிரோதமாக மின்சார வேலிகளைப் பொருத்தியுள்ளார்.

சம்பவத்தன்று இந்த இளைஞன் வயலுக்குச் சென்றுள்ள நிலையில் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version