நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 26/12/2024 | Edited on 26/12/2024

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தில் இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி மற்றும் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

இந்த படம் அடுத்த மாதம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. அடுத்ததாக மொத்த படப்பிடிப்பும் முடிந்ததாக கூறி அஜித்திற்கு மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருந்தார். இதையடுத்து அஜித் தனது டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்தனர். 

Advertisement

இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்திருக்கும் நிலையில் அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘சவதீகா…(Sawadeeka)’ நாளை மதியம் 1 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதோடு அஜித், த்ரிஷா காதலுடன் இருக்கும் புகைப்படம் அடங்கிய போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் அப்பாடல் குறித்து அனிருத் ஒரு அப்டேட் பகிர்ந்துள்ளார். இப்பாடலை அந்தோனிதாசன் மற்றும் அறிவு இருவரும் பாடியுள்ளதாகவும் குத்துப்பாடல் போன்று இப்படம் இருக்கும் எனவும் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பாடலின் சில வரிகளையும் குறிப்பிட்டுள்ளார்.