சினிமா
விடாமுயற்சி தொடர்பில் மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர்..!
விடாமுயற்சி தொடர்பில் மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர்..!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றது.நாளைய தினம் இப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.இது தொடர்பான உத்தியோக தகவல் வெளியாகியுள்ளது.இப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கவுள்ளார்.இந்நிலையில் தற்போது இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் ,திரிஷா மற்றும் நாட்டுப்புற கலைஞர் அந்தோணிதாஸனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.குறித்த பதிவிற்கு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.பொங்கல் தினத்தன்று இப்படம் வெளியாகுமா என எதிர் பார்த்து கொண்டிருக்கும் தல ரசிகர்களுக்கு இப்பதிவு விருந்தாக அமைந்துள்ளது.