சினிமா

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன்! வைரலாகும் முதல் பாடல்!

Published

on

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன்! வைரலாகும் முதல் பாடல்!

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாம்வேல் நிக்கோலஸ் ஹாரிஸ் சினிமா துறையில்  இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவரின் இசையில் வெளியான முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் எண்ணிலடங்காத ஹிட் பாடல்களை கொடுத்தவர். கடந்த சில ஆண்டுகளாக இவரின் இசையில் பாடல்கள் வெளியாகாமல் இருக்கிறது. ஒரு சில காரணங்களினால்  இப்போது சினிமா கேரியரில் ஒரு சிறு பின்னடைவை அவர் சந்தித்து வருகிறார்.  இந்நிலையில் இவரின் மகன் சாம்வேல் நிக்கோலஸ் ஹாரிஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.இளம் இசையமைப்பாளர் நிக்கோலஸ் இசையில் உருவாகியுள்ள ‘அய்யய்யோ’ என்ற பெண்களை குறித்து எழுதப்பட்ட தனியிசைப் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த பாடலில் அவரே நடித்திருப்பதும் சுவாரஷ்யமானதாக அமைந்துள்ளது. இப்பாடலை பார்த்த பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version