சினிமா

எங்க நம்பிக்கைல தீய வைக்க..!! முத்துவுக்கு அர்ச்சனா சொன்ன CODE WORD

Published

on

எங்க நம்பிக்கைல தீய வைக்க..!! முத்துவுக்கு அர்ச்சனா சொன்ன CODE WORD

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கின்றது. இதனால் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதுவரையில் வெற்றிகரமாக 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது எட்டாவது சீசனும் இன்னும் ஒரு சில நாட்களிலேயே முடிவுக்கு வரவுள்ளது.பிக்பாஸ் சீசன் 8ல் தற்போது ப்ரிஸ் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதன்போது பிக் பாஸ் வீட்டில் எஞ்சியுள்ள போட்டியாளர்களின் பெற்றோர், சகோதரர்கள் வந்த நிலையில் இன்றைய தினம் போட்டியாளர்களின் நண்பர்கள் என்ட்ரி கொடுத்திருந்தார்கள். இதன்போது சௌந்தர்யா தனது நண்பரான விஷ்ணுவுக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணிய காட்சிகளும், அருண் தனது காதலியான அர்ச்சனாவை சக போட்டியாளர்களுக்கு அறிமுகம் செய்த க்யூட் சம்பவங்களும் இணையத்தை கவர்ந்துள்ளன.இந்த நிலையில், பிக்பாஸ்க்கு என்ட்ரி கொடுத்த டைட்டில் வின்னர் அர்ச்சனா முத்துவுக்கு கோர்ட் வேர்ட் ஒன்றை சொல்லிச் சென்றுள்ளார். மேலும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர் வழங்கிய அட்வைஸ் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக காணப்படுகின்றது.அதன்படி, சௌந்தர்யா நீங்க சூப்பர்ங்க.. எப்படி உங்களை போல இருக்கிறது என்று தெரியவில்லை என சௌந்தர்யாவை புகழ்ந்து தள்ளி உள்ளார். அதே போல ராயனுக்கும் தனது சப்போர்ட்டை வழங்கி அவருக்கு ரொம்பவும் இம்பார்டன்ட் கொடுத்துள்ளார்.இதை தொடர்ந்து முத்து குமரனிடம் நீங்க வார இறுதியில் விஜய் சேதுபதியுடன் பேசுவது ரொம்ப பிடித்து இருக்கு..அது நிறைய பண்ணுங்க என அர்ச்சனா தெரிவித்து உள்ளார். மேலும் முத்துகுமரனிடம் கார்டியலா  இருக்கனும் என்று சொல்லுகிறார்.ஆனால் அதற்கு ஹார்ட் ஆபரேஷனா என முத்து குமரன் கேட்கிறார். இது தொடர்பில் இருவருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதனால் அர்ச்சனா முத்துவுக்கு என்ன கோர்ட் வேர்ட் சொல்லி இருப்பார் என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version