பொழுதுபோக்கு

சனியின் சூழ்ச்சி: சிவனுடன் மோதும் கார்த்திகேயன்: சிவசக்தி திருவிளையாடல் அப்டேட்!

Published

on

சனியின் சூழ்ச்சி: சிவனுடன் மோதும் கார்த்திகேயன்: சிவசக்தி திருவிளையாடல் அப்டேட்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாக ஒளிப்பரப்பாகி வரும் சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிகப் புராண தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில், இந்த வாரம், சனியில் சூழ்ச்சியால் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.  அசுர மாதா திதிக்கு, சிவன் பார்வதியை அழிக்க இருந்த அனைத்து மார்க்கமும் அடைக்கப்படுகிறது. இதனால், சூர்யா புத்திரனான சனிதேவனை நாடுகிறார் அசுர மாதா திதி. சனிபகவான் சிவன் பார்வதியின் குடுபத்திற்கு எதிராக திரும்புகிறார். கார்த்திகேயனை சனியின் பிடியில் சிக்கவைத்து, கார்த்திகேயனை சிவனுக்கு எதிராக திருப்புகிறார். இதனால் கைலாயத்தில் பிரச்னை உருவாகிறது.இந்திரனின் மகளான தேவயானையயை திருமணம் செய்ய கார்த்திகேயன் விரும்புகிறார். ஆனால், சிவன் மீது கொண்ட வன்மத்தால், கார்த்திகேயன் தேவயானை திருமணத்திற்கு இந்திரன் மறுத்துவிடுகிரார். இதனால் இந்திர லோகத்தில் இருந்து தேவயானையயை கடத்தி செல்கிறார் கார்த்திகேயன். இதனை கண்ட சிவபெருமான் அவர்களை தடுக்கிறார். அதனால் சிவபெருமான் மீது கோபம் கொள்ளும் கார்த்திகேயன், அவருடன் போருக்கு தாயாரகிரான்.அவர்களின் போரை தடுக்க வழி தெரியாமல் தேவர்கள் கலங்கி நிர்க்கிறார்கள். சிவபெருமான், கார்த்திகேயன் போரை யார் தடுப்பார்கள்? கார்த்திகேயன் தேவயானை திருமணம் நடக்குமா? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இந்த வாரக் கதை நகர்கிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version