சினிமா

சூப்பர் ஹிட் இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா! அதிரடியாய் வந்த சூர்யா-46 அப்டேட்!

Published

on

சூப்பர் ஹிட் இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா! அதிரடியாய் வந்த சூர்யா-46 அப்டேட்!

நடிகர் சூர்யா ‘கங்குவா’  திரைப்படத்தின் பின்னர் 2 படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் சூர்யா 46க்கான அப்டேட் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனருடன் சூர்யா கைகோர்க்கவுள்ளார். இது சூர்யா ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் கங்குவா இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் மொத்தமாக பிளாப் ஆனது. இந்நிலையில் சூர்யா அடுத்து கட்டாய வெற்றியை நோக்கி நகர்கிறார். சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சமீபத்தைய சூப்பர் ஹிட் படமான ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.  இந்த படம் மாருதி காரின் 769 cc எஞ்சின் உருவாக்கம் பற்றியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை லக்கி பாஸ்கர் படத்தை தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. சூர்யாவின் இனி வரும் படங்களில் ரசிகர்களிடத்தே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version