சினிமா

தமிழ் படம் -3 அடுத்த வருடம் !

Published

on

தமிழ் படம் -3 அடுத்த வருடம் !

தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சி.எஸ். அமுதன். இவர் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் உருவான தமிழ்ப் படம் 2 ஓரளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றது.

Advertisement

‘தமிழ்ப் படம்’ படத்தின் கதை, தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படங்களை கிண்டல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு இருந்ததே அதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இப்படங்களை தொடர்ந்து சி.எஸ் .அமுதன் இயக்கிய ரத்தம் என்ற படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், விரைவில் ‘தமிழ்படம் 3’ உருவாகவுள்ளதாக அப்படத்தின் கதாநாயகன் சிவா உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த சிவா, ”தமிழ்ப்படம் 3 குறித்து ‘ஒய் நாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்ரீகாந்த்திடம் பேசியுள்ளோம். கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கு மேலாக பேசி, 2025ல் தமிழ்ப்படம் 3 எடுக்க முடிவுசெய்துள்ளோம். ஒரு கதை எழுதி படம் பண்ணுவது நார்மல். ஆனால், 100 படங்களை பார்த்து கதை எழுதுவது சவாலான விஷயம்” என்று தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version