உலகம்

தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை!

Published

on

Loading

தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை!

தென் கொரியாவின் பிரதமரும் தற்காலிக ஜனாதிபதியுமான ஹான் டக்-சூவை (Han Duck-soo) பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை தென் கொரியாவின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வியாழன் (26) அன்று தாக்கல் செய்துள்ளனர்.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியால் (DP) பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க ஹான் டக்-சூ மறுத்ததை அடுத்து பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அவர்கள் தாக்கல் செய்தனர்.

Advertisement

டிசம்பர் 3 அன்று குற்றம் சாட்டப்பட்டு, பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலின் இராணுவச் சட்ட முயற்சிக்கு ஹான் உதவியதாக எதிர்க்கட்சியும் குற்றம் சாட்டியுள்ளது.

ஹான் முன்னதாக அதைத் தடுக்கத் தவறியதற்காக மன்னிப்புக் கோரியிருந்தார்.

இந்த நிலையில் ஹான் டக்-சூவின் பதவி நீக்க தீர்மானம் அடுத்த 24 முதல் 72 மணி நேரத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அது வெற்றிபெற 300 எம்.பி.க்களில் 151 பேர் வாக்களிக்க வேண்டும்.

தற்போது பாராளுமன்றத்தில் உள்ள 300 இடங்களில் 170 இடங்களை ஜனநாயகக் கட்சி கொண்டுள்ளது.

எதிர்க்கட்சி கூட்டணி 192 இடங்களைக் கொண்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version