இலங்கை

பிரதி அமைச்சரை ஏமாற்றி 17 கடவுச்சீட்டுகளுடன் தலைமறைவான நபர்!

Published

on

பிரதி அமைச்சரை ஏமாற்றி 17 கடவுச்சீட்டுகளுடன் தலைமறைவான நபர்!

 பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகலவையும், அவரது அமைச்சின் அதிகாரிகளையும் பணியாளர்களையும் ஏமாற்றிவிட்டு 17 புதிய கடவுச்சீட்டுகளுடன் தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அலுவலகத்திற்கு  தான் முதல்தடவை விஜயம் மேற்கொண்டவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

நான் அமைச்சின் அலுவலகத்திற்குள் முதல்தடவை நுழைந்ததும்,நபர் ஒருவர் என்னை அமைச்சின் பல பிரிவுகளிற்கு அழைத்து சென்று காண்பித்தார்.

நான் அவர் அமைச்சை சேர்ந்தவராகயிருப்பார் என நினைத்தேன்.

 ஆனால் அவர் தன்னை ஜனாதிபதி செயலகம் பிரதியமைச்சரின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுவதற்காக அனுப்பியதாக அமைச்சரவை பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

அன்றைய தினம் தேநீர் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது,அந்த நபர் அதனை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக செயற்பட்டார்.

கடவுச்சீட்டை தயாரிக்கும் பகுதிக்கு என்னை அழைத்துச்சென்ற நபர் இதுவரை எந்த அமைச்சரும் அங்கு வரவில்லை என குறிப்பிட்டார்.

மறுநாள் எனது அலுவலக பணியாளர்கள் என்னை பாராட்டி ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கவேண்டும் என இந்த நபர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.

Advertisement

அவர் எனது அலுவலக பணியாளராக பணியாற்றுவதற்கு பொருத்தமற்றவர் என எனக்கு தெரிவித்திருந்தனர்.

அதன் பின்னரே விசாரணைகளின் போது அந்த நபர் எனது அமைச்சுடன் தொடர்பில்லாதவர் என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட நபர் 17 கடவுச்சீட்டுகளுடன் அமைச்சின் அலுவலகத்திலிருந்து வெளியேறியதும் தெரியவந்துள்ளது. அமைச்சர் கடவுச்சீட்டுகளை பெறச்சொன்னார் என தெரிவித்தே அவர் கடவுச்சீட்டுகளை பெற்றதாகவும், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version