இந்தியா
மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!
மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 26) காலமானார். அவருக்கு வயது 92.
மன்மோகன் சிங் மறைவை ஒட்டி இன்று (டிசம்பர் 27) முதல் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று காலை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
மன்மோகன் சிங் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேசத்துக்காக ஆற்றிய சேவைக்காக என்றும் நினைவுகூரப்படுவார்.
அவரது மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். இந்தியாவின் தலைசிறந்த மகன்களில் ஒருவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை இழந்துவிட்டது. எளிமையான பின்புலத்தில் இருந்து வந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தார்.
அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றினார். நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.
மன்மோகன் சிங் மறைவால், தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு அரசியல்வாதியை, இந்தியா இழந்துவிட்டது.
அவரது அமைச்சரவையில் தொழிலாளர், ரயில்வே, சமூக நலத்துறை அமைச்சராக இருந்ததில் பெருமிதம் கொள்கிறேன்.
வார்த்தைகளைக் காட்டிலும் செயல் திறன் கொண்டவர். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு இந்திய வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்படும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் மன்மோகன் சிங் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது.
நான் ஒரு வழிகாட்டியை இழந்துவிட்டேன். மன்மோகன் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வோம்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது.
பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது.
தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன.
ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், திறமையான நிர்வாகி மற்றும் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி, அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.